Featured Posts
Monday, May 9, 2011
Wednesday, March 3, 2010

புதன்கிழமை, மார்ச் 3, 2010, 11:22[IST]
' முற்றும் துறந்தவர் '....
யார் இந்த நித்யானந்தா?
நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பிரச்சனையில் மாட்டியுள்ள நித்தியானந்தா மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானவர் ஆவார்.
'கதவைத் திற காற்று வரும்' என்ற தலைப்பில் அவரது போதனைகள் மிகவும் பிரபலமானவை. இவரை நிஜ சாமியார் என நினைத்து பல தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் இவரது உரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.
இப்போது தனது செயல் மூலம் அவரை நம்பிய மக்களையும் ஊடகங்களையும் நித்யானந்தா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.
உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.
'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா, அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உங்களில் ஒருவன்.. Ez.
Labels:
நித்து....
Sunday, November 16, 2008
பெண்
ஆயுதம் கிடைக்கவில்லை அதனால் தான் நடமாடுகின்றன ,
சில பரிதாப உயிர்கள் ...
இவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்,
பெண்ணே! பிறந்திடு ...
சில பரிதாப உயிர்கள் ...
இவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்,
பெண்ணே! பிறந்திடு ...
Wednesday, November 14, 2007
சாதியின் சாதனை.
"சாதிகள் இல்லைலயடி பாபபா "
கற்றுத் தந்த ஆசிரியர்
இரண்டு நாட்கள் முன்பு வரை
கால் கடுக்க நின்றது
சாதி சான்றிதழ் வாங்க....
கற்றுத் தந்த ஆசிரியர்
இரண்டு நாட்கள் முன்பு வரை
கால் கடுக்க நின்றது
சாதி சான்றிதழ் வாங்க....
Subscribe to:
Posts (Atom)